சிலர் சொன்னா நேரத்திற்கு வர மாற்றங்க,
பேசும் போது தொந்தரவு தருமாறு நடந்து கொள்வது
தனி தனி குழுவ பிரிந்து போறது
கடைசி வரை வரேன்னு சொல்லிட்டு வரமா இருப்பது
எல்லோரும் பெரியவங்களாக இருப்பாதால் என்னால் (எதிர்த்து) பேச முடியவில்லை,
போன தடவையே நாகராஜன் அய்யா, புஷ்ப அம்மா பாடும் போது நான் பதிவு செய்யும் போது பின்னால் பேச்சு குரல், இந்த மாதிரி பண்ண பாடுரவங்களுக்கு கஷ்டம், இவங்களும் அந்த பாட்டா கேக்கமா, அடுத்தவங்களையும் கேக்க விடமா பண்றாது, நல்ல பழக்கம் கிடையாது,அந்த பாட்டு பிடிக்கவில்லையா எழுந்து வெளியே போய்ரணும்,
இந்த தடவை சந்திப்பின் போது என்ன பண்ணனும் ஏற்கனவே (நேற்றே) முடிவு பண்ணிட்டோ(ம்)ன், நிகழ்ச்சி நிரல் இன்னும் சில தினங்களில் வெளிவரும்
2010/2/1 <umanaths@gmail.com>
வரும் 21ஆம் தேதி குரோம்பேட்டையில் சந்திப்பு நடக்கின்றது. நாமெல்லாம் ஏற்கனவே சந்தித்து பரிச்சயம் ஏற்பட்டு உள்ளதால் இந்த முறை சில முயற்சிகளை மேற்கொள்ளலாம்..
1. யாரேனும் சாதித்த நபர்களை அழைத்து கெளரவிக்கலாம். எந்த துறை என்பதை நாமே முடிவு செய்யலாம்.
2. எழுத்து துறையில் நாம் இயங்குவதால், நல்ல படைப்பாளி ஒருவரை அழைத்து பேச / உரையாட செய்யலாம்.
3. ஏதேனும் ஒரு தலைப்பில் நாமே விவாதிக்கலாம்.
4. "தமிழ்தென்றல் 2010" - இந்த வருடத்திற்கான தமிழ்தென்றலில் திட்டங்கள் என்ன என்பதை விவாதிக்கலாம். செயலாற்ற நமக்கான ஒரு இலக்கினை வைத்து பயணிக்கலாம்.
5. எழுத்து என்றில்லாமல் ஏதேனும் வல்லுனரை அழைத்து உரையாட வைக்கலாம். (நமக்குள்ளே வல்லுனர் இருந்தாலும் புதிய நபரின் கருத்துக்கள் நம் எண்ணங்களை விரிவடைய வைக்கும்)
முக்கியமாக சில இலக்குகளை வைத்து/ பேசி முடிவெடுத்து பயணிப்பது சிறப்பாக இருக்கும்.
உங்கள் கருத்துக்களையும் சொல்லுங்க. கடைசியா எதை இந்த சந்திப்பிறகு செய்யலாம் என விழா ஏற்பாட்டாளர் உதயனிடம் விட்டுவிடலாம்.
- விழியன் --
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"
--
--உதயன்--
தேடிச் சோறு நிதம் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"
No comments:
Post a Comment