Wednesday, February 17, 2010

Re: தஞ்சை பெரிய கோயில்



2010/2/17 Balaji Baskaran <bas.balaji@gmail.com>
மாமன்னன் ராஜராஜனால் 1000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட தமிழர் கட்டடக்கலையின் சாதனைச் சான்றாக அனைவராலும் பிரமாண்டமாக வியந்து பார்க்க கூடிய தஞ்சை பெரிய கோயில்.
 
நேற்று சன் டிவியின் நிஜம் நிகழ்ச்சியில் இக்கோயிலின் பெருமைகளை காட்டினார்கள்.
 
இத்தனை நாள் நம்பியிருந்தது கோபுரத்தின் உச்சியில் இருப்பது 80 டன் எடையுள்ள ஒரே கல்லால் செய்யப்பட்ட விமானம். ஆனால் அது ஒரே கல் இல்லையாம். பல சிறு சிறு கற்களால் கட்டப்பட்டதாம்.

ஆமாம் இது உண்மை

 

மேலாக, இந்தக் கல்லை உச்சிக்கு கொண்டு செல்ல 12 கி மீ தொலைவில் இருந்து மணல் சரிவாக குவிக்கப்பட்டு கல்லை உருட்டிக் கொண்டு வந்தார்களாம். 12 கி மீ தொலைவில் மண் தோண்டிய ஊர்ப் பெயர் சாரப்பள்ளம்.

ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள், இப்படி 12 கீமி தொலைவில் சாரம் கட்ட அவசியமேயில்லை என. இவையெல்லாம் மிகைப்படுத்தப்பட்ட செய்திகளே.

12 கிலோமீட்டர் என்பது மிகைப்படுத்தப்பட்டதாக இருக்க வாய்ப்பு அதிகம்


 

மேலும் 12 அடி நீளமும் 9 அடி உயரமும் 6 அடி அகலமும் உள்ள நந்தி வளர்கிறது என்றும் , அதற்காக அதன் மேல் ஆணி அடித்திருக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் அதுவும் உண்மையில்ல என கோயிலின் குருக்கள் கூறினார்.



நந்தி வளர்வது இல்லை

 
இந்தக் கோயில் கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட கருங்கற்கள் 80 கிமீ சுற்றளவில் எங்குமே இல்லையாம். சுமார் ஒன்னரை லட்சம் டன் கருங்கற்கள் தேவைப் பட்டிருக்கிறது இந்தக் கோயில் கட்டுவதற்கு. இவ்வளவு கற்களை எப்படி இங்கு கொண்டு வந்தார்கள் என ஆராய்ச்சியாளர்கள் ஆச்சரியப்படுகிறார்கள்.


இதுவும் உண்மை....

 
இன்னொரு வியப்பான விசயம் சுமார் 230 அடி உயரமுள்ள இந்தக்  கோயில்லுக்கு அஸ்திவாரம் வெறும் 5 அடிகளேயாகும்.



என் கல்யாணத்துக்கு தஞ்சை வரும்போது உங்க எல்லோருக்கும் பல அரிய தகவல்களோடு நானே சுற்றிக்காட்டுகிறேன்





--
நட்புடன்

மழைக்காதலன்
http://charlesantony.blogspot.com/
http://charlessmiles.blogspot.com/

சாதியில்லாத அமைதியான சமூகத்தை உருவாக்குவதுதான், நீதியான, முரண்பாடற்ற, சமமான உரிமையுள்ள சமூகத்தை உருவாக்குவதற்கான முதல் படி.  சாதி, வர்க்க, பாலின, இன வேறுபாடில்லாத சம உரிமையுள்ள சமுதாயம் உருவாக வேண்டும். அப்படி இல்லாத சமுதாயமானது சமூக அடக்குமுறை, அரசியல் சுரண்டல்கள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், கலாச்சார ஆதிக்கம், பாலின பாகுபாடு, வர்க்க ரீதியாக தனிமைப்படுத்தப்படுதல், திட்டமிட்டு தனிமைப்படுத்தப்படுதல் முதலியவற்றுக்கு வழி வகுக்கும். இந்த வகையான ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமூகம் உருவாக்குவோம்.

--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"

No comments:

Post a Comment