உலக முழுதும் துன்பம் நீங்கிய இன்பத்தோடு நட்புறவு பாராட்டி நல்ல எண்ணங்களுடன் நலமாய் வாழ உங்களோடு சேர்ந்து காளிகாம்பாள் மட்டுமல்லாது அனைத்து தெய்வங்களையும் வேண்டி பிரார்த்திக்கிறேன். தங்கள் தூய்மையான இவ்வெண்ணத்தின் தாக்கம் எங்கும் நலம் சேர்க்கும். வாழ்க பல்லாண்டு
2010/2/16 சேட்டைக்காரன் <settaikkaran@gmail.com>
ஒரு அன்பார்ந்த வேண்டுகோள்
நம் மீது அன்பு செலுத்துகிறவர்களுக்கும், நமது அன்புக்கு உரியவர்களுக்கும் ஏதேனும் உடல் உபாதையோ, மன உளைச்சலோ ஏற்படுகையில் அவர்கள் நமது சொந்தங்களாக இல்லாதபோதும் நம் மனம் ஏனோ துடிக்கிறது. இன்று காலையிலிருந்து என் கண்ணில்பட்ட செய்திகளும், வாசித்த மடல்களும் எனக்குள் ஏற்படுத்திய ஒரு சிறிய கலக்கத்தின் காரணமாகவே இம்மடல். அதிகப்பிரசங்கித்தனமாக இருப்பின் மன்னிப்பீர்கள் என்பதை அறிவேன்.
எவருக்கோ உடல்நிலை சரியில்லை; எவருக்கோ மன உளைச்சல்; எவருக்கோ கருத்துவேற்றுமை; எவருக்கோ கசப்பு. கலகலவென்று சிரிக்கவும் முடியாத அளவு நம் அன்புள்ளங்களுக்காக மனது சற்றே சஞ்சலப்படுகிறது.
இறைநம்பிக்கையுள்ளவர்கள் அனைவரும், இன்றைய தினம் முடிந்தால் பிரார்த்திக்கலாமே? நமது நட்புகளின் நலத்துக்காக; அவர்கள் முகத்தில் மீண்டும் புன்னகை துளிர் விடுவதற்காக; கனத்த மனங்களில் களிப்பு நிறைவதற்காக! நாளையென்ற நம்பிக்கையையும், நாமிருக்கிறோம் என்ற ஆறுதலையும் அளிப்பதற்காக - அவரவர் நம்பிக்கையின் படி பிரார்த்திக்கலாமே! இறைவன் நமது வேண்டுகோளுக்குச் செவி சாய்க்காமலா போய் விடுவான்?
இன்று நான் காளிகாம்பாள் கோவிலுக்குச் செல்கிறேன். இது மனித உருவில் அம்பாள் எனக்கு இட்ட கட்டளை. உங்களுடன் நானும் பிரார்த்திப்பேன். அனைவரும் மீண்டும் சிரித்து வாழ வேண்டும் என்பதற்காக!
இப்படியொரு பதிவு இட்டது தவறென்றால் பிழை பொறுக்கவும். ஆனால், இறைநம்பிக்கை இருப்பவர்கள் நம் சினேகங்களின் மனங்களில் நம்பிக்கை விதைக்க முடிந்தால் பிரார்த்திக்கவும்.
--
சேட்டைக்காரன்
http://settaikkaran.blogspot.com
*************************************************
உட்கார்ந்து யோசிப்போமில்லே......? :-)))))))))))
--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"
--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"
No comments:
Post a Comment