Thursday, February 18, 2010

Re: சூழ்நிலை சொல்றேன், கவிதை சொல்ல முடியுமா!?

ஒன்னுமே சொல்ல முடியலை....கவிதை கையை கட்டிப் போட்டது..
அறிவு கண்டு ஆனந்தப் படுகிறேன்.
ஜெயஸ்ரீ ஷங்கர்/

2010/2/17 சேட்டைக்காரன் <settaikkaran@gmail.com>

2010/2/17 Balaji Baskaran <bas.balaji@gmail.com>

படிப்பு முடிந்ததும் பல நேர்முகத் தேர்வுகள் , தோல்விகள், முயற்சிகள்  மற்றும் வெற்றிகள் இவற்றைப் பற்றி கவிதை அல்லது பாடல்கள் சொல்லுங்களேன்.


(26-01-2008-ல் நான் எழுதிய கானா இது.)

சொந்த வீட்டில் அகதிபோல
    சோர்ந்திருந்த காலத்தைநான்
சொல்லக்கேட்டு உங்க மனசு தாங்குமா?-என்
    சோகக்கதை கேட்டா கண்ணு தூங்குமா?

அண்டப்புளுகு சொன்னதில்லே
    ஆகாததைச் செஞ்சதில்லே
தண்டச்சோறு பேருவச்சார் வீட்டிலே-நான்
    தலைகுனிஞ்சு நடந்துபோவேன் ரோட்டிலே

பெத்தமனம் பித்துன்னுதான்
    பெரியவங்க சொன்னாங்களே
செத்துப்போக ஏங்கினேனே பலமுறை-காது
    செவிடாகப் போகலேன்னு மனக்குறை

கல்யாணமோ காதுகுத்தோ
    கலந்துக்காமத் தவிர்த்திருப்பேன்
இல்லைசோலி என்றுசொன்னா கேலிதான்-என்னை
    இடிச்சுப்பேச ரொம்பப்பேர்க்கு ஜாலிதான்

காத்திருப்பேன் என்றுசொல்லிக்
    காதலிச்ச பொண்ணுமனசை
மாத்தினதால் அவமறந்தே போயிட்டா-அவ
    மனைவியாக அடுத்தவர்க்கு ஆயிட்டா

நடந்துதேய்ஞ்ச ரெண்டுகாலும்
    நாளும்பொழுதும் அழுதகண்ணும்
கடந்தகாலக் கணக்கிலேதான் இருக்குது-அந்தக்
    காலமெண்ணி இன்றும் மனசு துடிக்குது


--

சேட்டைக்காரன்

http://settaikkaran.blogspot.com
*************************************************
உட்கார்ந்து யோசிப்போமில்லே......? :-)))))))))))

--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"

--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"

No comments:

Post a Comment