Thursday, February 18, 2010

Re: சூழ்நிலை சொல்றேன், கவிதை சொல்ல முடியுமா!?

பாலச்சந்தர் அவர்களே....
கவிதையில் படமும் போட்டு பட்டமும் வாங்கி விட்டீர்கள்...
வாழ்வினிலே  ஒரு நாள் சுகம்.....
ஜெயஸ்ரீ ஷங்கர்.

2010/2/17 Natrajan Kalpattu Narasimhan <knn1929@gmail.com>
கொஞ்சம் பழசுதான்.  இருந்தாலும் படிங்க.
 

வாழ்வினிலே ஒரு நாள்

 

எண்ண அலைகள் என்னை யிழுக்கப்

பின்னே சென்றேன் எழுபது ஆண்டுகள்

 

அன்றொரு நாள் எந்த னண்ணன்

இரும்புக் கரம் பிடித்தே

என்னை யிழுத்துள்ளே தள்ளித்

தாளிட்டான் கதவை என் பின்னே

 

அண்ணன் கையிலே கத்திரியும் சீப்பும்

முகத்திலோ முழு நம்பிக்கை

தன் தொழில் திறமையதில்

 

காத்தான் கடை போகவேண்டாம் இனி நீ

உனக்கில்லை பீடி நாற்றாமும்

அவன் சொல்லும் கதைகளும்

திருத்து கின்றேன் உன் முடியை நானே

என்றவன் கேட்டான் என்ன வேண்டு முனக்கு

எரால் ஃப்ளின்னா ராஜ் கபூரா பாகவதரா

 

?ui=2&view=att&th=126d9f4113ff11d9&attid=0.1&disp=attd&realattid=ii_126d9f4113ff11d9&zw

 

?ui=2&view=att&th=126d9f4fb222fedc&attid=0.1&disp=attd&realattid=ii_126d9f4fb222fedc&zw

 

?ui=2&view=att&th=126d9f8cc92396e7&attid=0.1&disp=attd&realattid=ii_126d9f8cc92396e7&zw

    

 

ஏதோ ஒன்று என்றேன் நான்

திருப்பதியாக இல்லா திருந்தால்

திருப்தி எனெக்கு என்றே யெண்ணி

 

 

 

ஸ்டெப் கட்டும் செய்திடு வேன் நான்

என்றவன் சொல்ல

சரி யென்றேன் நான்

வேறேதும் வழியின்றி

 

சரக்... சரக்... என்றே கத்திரியின் சத்த மொரு புறம்

மறு புறமோ கதவினைத் தட்டும் சத்தம்

கூடவே அம்மாவின் சிம்மக் குரல்

யாரது உள்ளே திற கதவை என்று

 

அடுத்த கணம் மறைந்தன

கத்திரியும் சீப்பும் கட்டிலின் கீழ்

வெட்டிய மயிர்

காகிதப் பொட்டலத்தூள்

 

அண்ணன் கதவைத் திறக்க

அலறினாள் அம்மா

என்ன அலங் கோல மிது

கொலுப் படி போல் படிப் படியாய்

 

பிடி நாலணா ஓடு காத்தான் கடைக்கே

என்றவள் கத்த ஓடினேன் நான்

என்றும் மறக்குமோ என் வாழ்வில்

மயிர் வெட்டு கதைதான்

 

24-10-09                                நடராஜன் கல்பட்டு



2010/2/16 Balaji Baskaran <bas.balaji@gmail.com>
அடுத்த சூழ்நிலை சொல்றேன்.
 
சிறுவயது நினைவுகளை அல்லது நண்பர்களை நினைவு படுத்துகிற கவிதை. நாம செஞ்ச சின்ன சின்ன விசயங்களை சொல்கிற மாதிரி கவிதை / பாடல் சொல்லுங்களேன். நாமே நினைவு கூர்வது போல இருக்கனும்.
 
நன்றி!
 
 
--
நட்புடன்,
பாலாஜி பாஸ்கரன்
(அன்பே சிவம்)
----------------
மரம் வளர்ப்போம்!

அலுவலகத்தில் தேவையில்லாதவற்றை பிரதி எடுத்து காகிதங்களை வீணாக்க வேண்டாம்!!

தண்ணீரை வீணாக்காமல், முடிந்தளவு தேவையான அளவு மட்டும் பயன்படுத்துவோம்!!!

http://balaphotoblog.blogspot.com/

--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"

--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"

--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"

No comments:

Post a Comment