Thursday, February 18, 2010

Re: எலி வேட்டை

எலி வேட்டையை.....புலி வேட்டை ஸ்டைலில் சொல்லியிருக்கேள். பேச்சு நடையும், உணர்வு நடையும் பிரமாதம்.நானும்தான் எலி அடிக்கறேன், எலி பிடிக்கறேன் மரக்கட்டை எலி பொறி வைத்து, இப்படில்லாம் வர்ணனை பண்ணி சொல்ல முடியுமா? நீங்க நீங்க தான்......உங்களை அண்ணார்ந்து தான் பார்க்கணும்.
அன்போடு
ஜெயஸ்ரீ ஷங்கர்.


 
2010/2/18 Natrajan Kalpattu Narasimhan <knn1929@gmail.com>
கை பேசியெத் தொறந்தா உதயன் கிட்டேருந்து ஒரு செய்தி 'எலி செஞ்ச வேலெயப் பாத்தீங்களா"ன்னு.  எலி அவரு எனக்கு அனுப்பின மடலெத் தின்னுடிச்சாம்.  எனக்கு எலின்னா எப்பொவுமே பிடிக்காதுங்க.  பாருங்க எங்க ஊட்டுலெ எலியெ எப்படி நான் வேட்டையாடுறேன்னு.
 

 

 

எலி வேட்டை 1

 

border=0

 

நேற்று நான் 'இன்று எது பற்றி எழுதலாம்' என்று எண்ணிய போது மண்டைக்குள் மசாலா ஒன்றையும் காணோம்அது முற்றிலும் காலிமுனிவர்கள் சொல்வார்களே நீ முக்தி அடைய வேண்டுமானால் உன் எண்ண அலைகளை முழுவதும் அழித்துவிடு என்று அந்த நிலையை ஒருக்கால் அடைந்து விட்டேனோ என எண்ணி எனக்குள் ஒரு அல்ப சந்தோஷம்.  ஆனால்  நீடிக்க  வில்லை அது. "சட்டுனு இங்கெ செத்தெ வாங்கோ" என்றொரு குரல் சமையல் அறையிலிருந்துஎன்ன ஆயிற்றோ என்று பதட்டத்துடன் ஓடினேன் உள்ளே. 

மனைவியின் எடது கை வாய் முன்னே, வலது கையின் ஆள் காட்டி விறல் சாமான் உள் திசையில்பதிலுக்கு நானும் கேட்டேன் சைகையில், "என்ன?" என்று.  மெள்ளச் சொன்னாள் மனைவி "உள்ளெ கர் கர்னு சத்தம் கேக்கறது. எலி வந்திருக்குன்னு நெனெக்கிறேன்போய்ப் பாருங்கோ" வென்று. 

சாமான் அறை உள்ளே பூனை போல மெல்ல மெல்ல அடி வைத்துச்  சென்றேன்அறையினுள் மூன்று அலமாறிகள்ஒவ்வொன்றிலும் நான்கு அறைகள்கர் கர் சத்தம் உள் பூராவுமே கேட்டதுமுதலில் அருகில் இருந்த அலமாறியின் ஒரு அறையைக் காலி செய்தேன்பேக்கெட் பேக்கெட்டாய் பல வகைப் பருப்புகள்பொட்டுக் கடலைப் பேக்கெட்டை எடுத்த போது பொல பொலவெனக் கொட்டியது கடலை எலி கடித்த பொத்தல் வழியேகூடவே இருந்த மிளகாய்ப் பேக்கெட்டுகளோ முழுசாய் இருந்தன சேதம் ஏதுமின்றிகொத்தமல்லி பேக்கெட் பாதிக்கு மேல் காலிஅதனருகே நெல் உமிபோல மல்லித்தோல்கையில் எடுத்துப் பார்த்தால் அவற்றில் பருப்பைக் காணோம்தட்டு பூராவும் காலி செய்தேன்.   

சற்று நேரத்திற்கெல்லாம் சத்தம் பக்கத்து அலமாறியிலிருந்து கேட்டதுஒவ்வொரு அறை அருகிலும் காதை வைத்துக் கேட்டபோது மேல் தட்டிலிருந்து அதிகம் கேட்பதாகத் தோன்றியது எனக்குஅந்த அறையில் இருந்த அட்டைப் பெட்டிகளை எல்லாம் ஒவ்வொன்றக எடுத்து மனைவி கையில் கொடுத்தேன் வெளியில் வைக்கச் சொல்லி. பின் வரிசைப் பெட்டிகள் எல்லாவற்றிலும் எலி புகும் அளவுக்கு ஓட்டைஅருகிலோ அட்டைத் துண்டுகளின் குப்பைஅதைப் பெருக்கி எடுத்தேன்மீதமிருந்தது பிளாஸ்டிக் கவரில் சுற்றி வைக்கப் பட்ட பழய கேஸ் அடுப்பு ஒன்றுஅடுப்புக்குள் எங்கே இருக்கும் எலிஎதற்கும் அதையும் ஆட்டிப் பார்ப்போம் என்று ஒரு குச்சியால் சற்று தூக்கி ஆட்டிப் பார்த்தேன்எலி வரவில்லை. 

பசி வந்தது அதற்குள் எனக்குமதிய உணவும் ஆயிற்று. 

உணவுக்குப் பின் சாமான் உள்ளை அடைந்த என் மனைவி கேஸ் அடுப்பைக் கையால் எடுத்தாள்எம்பிக் குதித்துப் பாய்ந்தது எலி எதிர் அலமாறிக்குள்"வீல்" என்று கத்தினாள் அவள்சரி பொறி வைத்துத் தான் பிடிக்க வேண்டும் இந்த எலியை என்றெண்ணி ஒன்றுக்கு ரெண்டாய் வைத்து ஜன்னலையும் கதவையும் சாத்தி விட்டு வந்தேன்இன்று காலை பார்த்தபோது ஒரு பொறியில் தேங்காயைக் காணோம்எலியையும் காணோம்மற்றொன்று வைத்த இடத்தில் வைத்தபடி இருந்தது. 

இனி நாளை தொடரும் என் எலி வேட்டை. 

எலி வேட்டை - 2 


border=0

படம் பிடித்தது க.ந.நடராஜன்


எலிகள் பற்றிய ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர், எலி ஒர் ஆண்டில் ஐந்து அல்லது ஆறு முறை குட்டிகள் போடும், ஒவ்வொரு முறையும் சுமார் பத்துப் பன்னிரெண்டு குட்டிகள் எனஇரண்டு எலிகள் அவற்றின் ஆயுட் காலத்திற்குள் சுமார் 500 முதல் 2000 வரையாகப் பெருகக்கூடும் என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள். 

இவ்வாறு அளவுக்கு மீறி பெருகும் எலிகளின் எண்ணிக்கையை கட்டுக்குள் வைத்திருப்பது அவற்றையே உணவாக உட்கொள்ளும் ஆந்தைகளும் பாம்புகளும் தான். 

செப்டெம்பர், 13, 2007 ஹிந்து நாளிதழில் வெளிவந்த ஒரு ஆய்வின் படி நம் நாட்டில் பஞ்சாப் மாநிலம் ஒன்றில் மட்டும் ஒரு வருடத்தில் சுமார் 17,00,000 டன் உணவு தானியங்கள் எலிகளால் தின்று தீர்க்கப் படுகின்றனவாம். 

எலிகள் விளைக்கும் சேதம் பற்றி அறிந்திருந்த எனக்கு எப்போதும் எலிகளைக் கண்டவுடனே கொன்று விடவேண்டும் என்றுதான் தோன்றும்ஆனால் என் மனைவியோ அதற்கு நேர் எதிர்"ஐயோ பாவம்போகிறது விட்டு விடுங்கள்ஜன்னலைத் திறந்துஅது வெளியே போய் விடும்", என்பாள்இது இன்றைய நிலை இல்லைஎன்றுமே எங்கள் வீட்டில், அதாவது கூட்டுக் குடும்ப நாட்களிலேயே, இரண்டு கட்சிக்கும் சம பலம்தான்ஓட்டெடுத்திருந்தால் தொங்கு நிலை வந்திருக்குமோ என்னவோ 

சரி நாம் நேற்று ஆரம்பித்து வைத்த எலி வேட்டையின் கதைக்கு வருவோம். 

இன்று எப்படியும் அந்த எலியை அடித்துக் கொன்று விடுவது என்ற ஒரே எண்ணத்துடன் கையில் ஒரு சிறு மூங்கில் குச்சியுடன் மெதுவாக சாமான் உள் கதவைத் திறந்து கொண்டு நுழைந்தேன்மனைவியும் என் பின்னேயே வந்தாள்ஒவ்வொன்றாக ஒரு அலமாரியில் இருந்த பாத்திரங்களை மனைவியிடம் கொடுக்க அவள் அதை வாங்கி சமையல் உள்ளே வைத்தாள்அப்போது ஒரு பாத்திரத்தை நான் நகர்த்திய போது திடீரெனெ காலியாக இருந்த அலமாறிக்குள் தாவி ஒரு வினாடி மூலை ஒன்றில் பதுங்கியது எலி. அதே சமயம் துள்ளி வெளியே குதித்த மனைவி தன் பின்னே கதவையும் சாத்திக் கொண்டு போனாள்.   

'ஆகா அடிக்க வாட்டமாக இருக்கிறது' என்றெண்ணி கையில் இருந்த குச்சியை ஓங்கி வீசினேன் எலியை நோக்கி'நாமொன்று நினைக்க நடப்பது வேறொன்று' என்பது தானே விதி?  அடி எலியின் மீது விழ வில்லைபதிலாக வரும் வழியிலேயெ அந்த அடி ஒரு ஜாடியின் மீது விழ, அது 'படார்' என்ற சத்ததுடன் கீழே விழ, உடைந்தது சுக்கு நூறாக பீங்கான் ஜாடிஇந்த வருடம் மாவடு வாயில், தப்பு தப்பு, மாவடு தின்ன ஏங்கும் என் வாயில் மண்ணுதான் என்றெண்ணி வருந்தினேன். 

"என்ன ஆச்சு?" என்று கேட்டபடி உள்ளே வந்த சகதர்மிணி தரையில் கிடந்த ஜாடிச் சிதரல்களைப் பார்த்ததும், "போரும் நீங்க எலி அடிச்சதுபேசாமெ ஜன்னலெத் தெறந்து வெச்சூட்டு கதவெச் சாத்திண்டு வாங்கோஎலி தானா வெளிலெ போய்டும்", என்றாள். 

வாயைத் திறக்க முடியுமோ?  அதான் முதலிலேயே சொல்லி விட்டாளே "பேசாமெ" என்றுசொன்னதைச் செய்து விட்டு வெளியே வந்தேன் அசடு வழிய நான். 

நடராஜன் கல்பட்டு

 

 

 


--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"

--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"

No comments:

Post a Comment