Thursday, February 18, 2010

Re: பதினெட்டுச் சித்தர்கள் பட்டியல் (List of 18 Siddhas )


ராம தேவர் (Yakub / Jacob) கி.பி. 14 - 15ம் நூற்றாண்டுகள்புலஸ்தியர்
கருவூரார்
  அழகர் மலை


"ஆதியென்ற மணி விளக்கை அறிய வேணும் அகண்ட பரிபூரணத்தைக் காண வேணும் சோதியென்று துய்யவெளி மார்க்கமெல்லாஞ் சுகம் பெறவே மனோன்மணி யென்னைத்தாள் தன்னை நீதியென்ற பரஞ்சோதி ஆயிபாதம் நிற்குணத்தினின்ற நிலையாருங் காணார் வேதியென்ற வேதாந்தத்துள்ளே நின்று விளங்குவதும் பூசையிது வீண் போகாதே"
மேற்கண்ட பாடலில் உள்ளமாகிய கோவிலில் இறைவனை இருத்தி, அன்றாடம் சித்த சுத்தியுடன் வழிபட்டால் எல்லா சித்திகளும் கைவரப்பெறலாம் என்பது இராம தேவரின் பூசை விதி முறையின் பொதுக்கருத்தாக அமைகிறது. சிந்தையை அடக்கி சும்மா இருப்பது சுகம் என்பர் யோகிகள். ஆனால் அது அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல. இராமதேவர் தன்னுடைய பாடல்களில் மனதை அடக்கவும், உள்ளத்தை ஒருநிலைப்படுத்தவும் உலகின் முழுமுதற் பொருளை வணங்கிவழி காட்டுகிறார்.


இராமதேவர் வாழ்ந்தது நாகப்பட்டினத்தில். அவரது உள்ளமெல்லாம் இறையுணர்வு எப்போதும் நிறைந்திருந்தது. அரபு நாடுகளில் ஏராளமான கற்ப மூலிகைகள் கிடைக்கும் என்றெண்ணி அடிக்கடி அரபு நாடுகளுக்குச் சென்று வந்தார். இராமதேவர் பல சித்தர்களுடன் தொடர்பு வைத்திருந்தார். இராமதேவன் அரபுமொழியில் 17 மருத்துவ நூல்களை எழுதினார். இராம தேவருக்கு நபிகள் நாயகம் ஒருமுறை காட்சி கொடுத்ததாகக் கூறுகின்றனர். அதன்பின்பு சிலகாலம் சமாதிநிலையில் இருந்தார்.


போகமுனிவர் ஒரு நாள் இராமதேவர் தியானத்திலிருக்கும் போது வந்தார். அப்போது இராமதேவரிடம் "மெக்காவால் யாக்கோபுகளாவும் தமிழ்நாட்டில் இராமதேவராகவும் இருக்கும் சமாதி அடைய வேண்டிய காலம் இதுவல்ல. இன்னும் ஏராளமான பயனுள்ள காரியங்கள் நீ செய்ய வேண்டியுள்ளன. எனவே, அவற்றையெல்லாம் முடித்த பின்பு சமாதியடைவது நல்லது என்றார். போகரின் உபதேசத்தால் இராமதேவர் பல்வேறு அரிய கற்ப மூலிகைகளை பற்றி அறிந்து, அவற்றை சேகரிக்க தமது ஒப்பற்ற சித்தியால் காடுமலைகளையெல்லாம் சுற்றித்திரிந்தார்.


இராமதேவருக்கு சதுரகிரி மலையில் சித்திகள் பல கைகூடியதால் அங்கிருந்து தவம் செய்தார். அவர் சதுரகிரியில் வைத்திய சாஸ்திர நூல்களை தமிழில் எழுதினார்.


இராமதேவர் எழுதிய நூல்கள்:
வைத்திய காவியம் பரிபாஷை தண்டகம் வைத்திய சூத்திரம் நிகண்டு கலைஞானம் அட்டாங்கயோகம் முப்பு சூத்திரம் சிவயோகம் பட்கணி-பரஞானகேசரி வாத சூத்திரம் யாக்கோபுசவுக்காரம் வைத்திய சிந்தாமணி
சதுரகிரி வனத்தில் இராமதேவர் தங்கியதால் இராமதேவர் வானம் என்ற பெயரும் உண்டு. இவர் மெக்காவில் சமாதி அடைந்தார். அழகர் மலையில் சமாதியடைந்ததாக சில நூல்கள் கூறுகின்றன.


நன்றி :
www.heritagewiki.org




தமிழனாய்...
பாலாஜி.ச.இமலாதித்தன்
www.tamilvaasal.blogspot.com

வீரம் எனது குலத்தொழில்

--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"

No comments:

Post a Comment