Tuesday, February 2, 2010

Re: 'ஹைக்கூ' போல..../ குறும்பாய்க் குறும்பா (5)... : துரை

குறும்பாய்க் குறும்பா
நல்லாத்தான் இருக்குப்பா
நான் ரசிச்சே படிச்சேம்பா
கூடவே ஏக்கம் ஒண்ணு
இப்படி எளுதத் தான்
வரலியே நமக்கிண்ணு

நடராஜன் கல்பட்டு

2010/2/2 துரை.ந.உ <vce.projects@gmail.com>
 
 
 

புதைபொருள் ஆராய்ச்சி
முதுமக்கள் தாழி : உள்ளே
சிதைந்த சிம்கார்டு
 
 

22)நியாயவிலைக் கடை


ஏழை துயர் துடைக்கும் அரசாங்கக்கடை
இருப்பில் இருக்கும் எப்போதும்
இருப்பு இல்லை என்ற பதில்

 

 

 

23)உயிரா?உயிலா?


உயிர் துறந்தவரை அனுப்பிவிட்டு
உயில் திறக்கும் ஆர்வத்தில்
அவசரமாய் வாரிசுகள்
 

 
 
 
 
 
 
 
 

24)மறக்காமல்..


குடை மறந்த நாளில்
மறக்காமல் வந்தது :
மழை
 
 
 
 
 
 
 
 

25)பேராசை


அறுசுவையில் சோறு
ஆங்கிலத்தில் பேரு :பிறக்க
ஏங்குகிறாள் மாடிவீட்டில் நாயாக
 
 
 
 
 
 
 

26)உண்மை


சமையல்காரர் ருசிபார்த்தபின்
மிச்சத்தில் பசியாறுகிறார்:
முதலாளி
 
 
 
 
 
 
 
--
என்றும் அன்புடன்  --  துரை --

வெண்பாக்கள் : 'மரபுக் கனவுகள்'     : http://marabukkanavukal.blogspot.com/
கவிதைகள்: 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.com
ஹைகூ     : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவுகள்     : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதைகள்      : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
குழுமம்       : 'தமிழ்த் தென்றல்' :http://groups.google.co.in/group/thamizhthendral

--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"

--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"

No comments:

Post a Comment