விளாத்திகுளம்: விளாத்திகுளம் அருகே வயலில் தங்க புதையல் சிக்கியது. இதை பங்கு போட்ட பெண்களிடம் இருந்து 109 கிராம் தங்க காசுகளை போலீசார் மீட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பூசனூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன். இவருக்கு சொந்தமான நிலம் ஊருக்கு ஒதுக்குபுறமாக உள்ளது.
இந்த நிலத்தில் இருந்த கருவேல மரங்களை ஜேசிபி இயந்திரம் மூலம் அப்புறபடுத்திய சந்திரன் அதன் பிறகு நிலத்தை உழுது கம்பு பயிரிட்டார்.
கடந்த சில நாட்களுக்கு முன் அங்கு அறுவடை தொடங்கியது. அப்போது ஒரு பெண்ணி்ன் காலில் பந்து வடிவிலான மண் கலசம் தட்டுபட்டுள்ளது. இதுபற்றி அந்த பெண் அருகில் இருந்த மற்றவர்களிடம் கூறினார்.
அனைவரு்ம் அந்த மண் கலசத்தை உடைத்து பார்த்தனர். அப்போது அதில் 27 தங்க காசுகள் மற்றும் ஒரு குண்டுமணி அளவிலான தங்கம் இருந்தது. அதை எடுத்துக் கொண்ட அவர்கள் அதிலிருந்த தங்கத்தை தங்களுக்குள் பங்கு போட்டு கொண்டனர்.
இந்த நிலையில் ஒரு சிலருக்கு கூடுதல் பங்கு போனதால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந் நிலையில் அவர்களில் சிலர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் நேற்று பூசனூர் கிராமத்தி்ற்கு சென்று சந்திரன் வயலில் வேலை பார்த்த 11 பெண்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
பின்னர் அவர்களிடம் இருந்து தங்க காசுகளை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்க காசுகள் அனைத்தும் குளத்தூர் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.
தற்போதைய 25 காசு அளவுகளில் இந்த நாணயத்தின் எடை சுமார் 3 கிராமில் இருந்து 4 கிராம் வரை உள்ளது. இவற்றின் மொத்த எடை 109 கிராம் ஆகும். மேலும் இந்த தங்க காசுகளில் அரபி எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன.
எனவே இவை சுமார் 500 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தை சேர்நதவையாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
இதுகுறித்து கிராம மக்கள் சிலர் கூறுகையில், புதையல் கிடைத்த வயல் பகுதியில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் வேலாயுதமேடு என்ற கிராமம் இருந்தது. வைப்பாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் அந்த கிராமம் முற்றிலும் அடித்து செல்லப்பட்டது.
எனவே வேலாயுதமேடு கிராமத்தை சேர்ந்த யாராவது இதை புதைத்திருக்கலாம். இந்த வயல் பகுதியில் இருந்த கருவேலமரங்களை அப்புறபபடுத்தும்போது பூமிக்குள் இருந்த இந்த மண் கலசம் மேலே வந்திருக்கலாம்.
மண்ணின் நிற்மும், கலசத்தின் நிறமும் ஒரே மாதிரியாக இருந்ததால் கவனிக்காமல் நிலத்தை உழுது கம்பு பயிரிட்டுள்ளனர். தற்போது அறுவடையின் போது அந்த புதையல் சிக்கியுள்ளது' என்றனர். நன்றி: http://thatstamil.oneindia.in/art-culture/essays/2010/buried-treasure-found-vilathikulam.html
--
நட்புடன்,
பாலாஜி பாஸ்கரன்
(அன்பே சிவம்)
----------------
மரம் வளர்ப்போம்!
அலுவலகத்தில் தேவையில்லாதவற்றை பிரதி எடுத்து காகிதங்களை வீணாக்க வேண்டாம்!!
தண்ணீரை வீணாக்காமல், முடிந்தளவு தேவையான அளவு மட்டும் பயன்படுத்துவோம்!!!
http://balaphotoblog.blogspot.com/
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"
No comments:
Post a Comment