Thursday, February 18, 2010

Re: சுட்டிப் பெண்ணல்ல சீதா.....!!

எம்மா, என்னை எவ்வளவோ பேர் திட்டியிருக்காங்க, இன்னும் திட்டறாங்க..நான் கவலைப்படலேம்மா! என் கண் முன்னாலே யாராவது பெண்களை மட்டம் தட்டினா என்னாலே பொறுத்துக்க முடியாது. அதுவும் அம்மாவைப் பத்தித் தப்பா பேசினா தாங்க மாட்டேன். அது பெத்த அம்மாவாத் தான் இருக்கனுமுன்னு அவசியம் இல்லை. மன்னிச்சிருங்கம்மா...


2010/2/19 seethaalakshmi subramanian <seethaalakshmi@gmail.com>
சேட்டை, அம்மா சொல்கின்றேன்
அடக்கிப் பேசு
இப்படி பேசக் கூடாது. குழுமம் என்றால் அவரவர் கருத்தைக் கூறுவார்கள். உணர்ச்சி வசப்படக்கூடாது. அதிலும் வார்த்தைகளை பேசும் பொழுது கவனத்துடன் இருக்க வேண்டும். இது என் தவறு என்னைப்பற்றி கவிதை வேணும்னு விளையாட்டய்க் கேட்டது தவரு. என்னால் கவிதை எழுத முடியும். நீங்கள் என்னைக் கிண்டல் செய்து எழுதவே விரும்பினேன். புகழ்ச்சி அதிகமாக்லவும் யார்யுக்கும் எரிச்சல் வரத்தான் செய்ய்7உம்.bell மேல் தவறில்லை

2010/2/18 seethaalakshmi subramanian <seethaalakshmi@gmail.com>

வயதாகிவிட்டால் குழந்தைக் குணம் வந்துவிடுகின்றது
எனக்கு வயது 75. யாருடைய புகழ்ச்சியும் இகழ்ச்சியும் என்னைப் பாதிக்காது. முகமறியாத மனித்ர்கள்.
இது ஓர் விளையாட்டு. நானே கேட்டு வாங்குகின்றேன். என்னைப்பற்றி பிள்ளைப் பருவ அனுபவங்களை எழுதினேன்.
அவர்களும் கவிதை எழுதமுனைந்த பொழுது ஏதோ எழுதுகின்றார்கள்.
இது பஜனையல்ல. அரட்டை. விளையாட்டுத்தனமானது.
இதையெல்லாம் கடந்தவள் நான்.  யாரையும் நான் பார்த்ததில்லை. சேட்டைக்காரனின் அரட்டையில் சிரித்து
மகிழ்ந்து வலிகளை மறந்து கொண்டிருக்கின்றேன். என்னால் பிறர் உதவியின்றி நடக்கக் கூட முடியாது. நான்கு சுவர்களுக்குள் அடந்து வாழும் ஓர் கூண்டுப் பறவை. கல்லறைக்குகருகில் இருக்கும் என்னைப் புகழ்ந்து அவர்களுக்கு என்ன கிடைக்கப் போகின்றது. இங்கிருப்பவர்கள் எல்லோரையும் குழந்தைகள் என்று நினைத்தேன்.
மனிதன் சாகும் வரை பாடம் கற்ருக் கொண்டிருக்கின்றான்
ஒருவரியால் சிரிப்பதை அடக்கும் வல்லமை கண்டு வியக்கின்றேன்.
இந்த இழையில் இனி யாரும் என்னைப்பற்றி எழுத வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.
எல்லோருக்கும் பிடித்ததைத்தான் நாம் எழுத வேண்டும்.
குழந்தை விளையாட்டில் ஓர் சூடு
வாழ்க bell வளர்க bell. நன்றி

2010/2/18 Mr.Bell <subbuyes@gmail.com>

சீதாம்மா & அவ்ங்க ஜால்ரா குரூப் ன்னு பஜனை பாபா ரேஞ்க்கு போய்ட்ருக்கு.

2010/2/19 சேட்டைக்காரன் <settaikkaran@gmail.com>


2010/2/19 jayashree shankar <jayashree43@gmail.com>
சுட்டிப் பெண்ணல்ல சீதா.....!!
 
நிலவுக்குக் கை கால் முளைத்த சிட்டு சீதா...
பாரதி கண்ட கனவை நனவாக்க
காரிகையாய் வளர்ந்து வந்த கனிகையவள்...


பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்-என்று பாரதியார் எழுதிய கவிதையின் உயிரோவியம் அம்மா. கல்தடுக்கினாலும் வாய் வலியில் "அம்மா" என்று தான் முதலில் அலறுகிறது. பிள்ளைகள் அம்மாவை மறந்தாலும், அம்மாவின் அன்பு என்ற நிழலைப் பிரித்தெடுத்து விட்டு ஒரு அடி கூட முன்னாலே எடுத்து வைக்க முடியாது. பெற்றவளாக இருத்தல் அவசியமில்லை; பரிவும் பாசமும் உள்ள எல்லா பெண்மணிகளும் அம்மா தான்.

அம்மா சக்திவடிவம்! அதனால் தான் அவரைப் பற்றிய முதல் கவிதையை இன்னொரு அம்மா எழுதியிருக்கிறார்-மிகவும் பொருத்தமாக!
 
சீதா மட்டும் தன் மனசுள்...ஆடிய
சுட்டிக் குழந்தையை இறுகக் கட்டிப் போட்டு
பயமுறுத்தி தூங்க வைத்திருந்தாள்..வருடக் கணக்கில்...
என்றாவது ஒருநாள், சுட்டி சீதா விழித்துக் கொண்டால்,
கொண்டாட்டமாய்  ஜீன்ஸ் போட்ட வேதாளம்
முருங்கை மரத்தில்... தொங்குமோ..?!!
சேட்டைக்கார மன்னனிடம்...கேள்வி கேட்டு கெடு வைக்க?

டெல்லிக்கு ராஜாவானாலும் தல்லிக்குப் பிள்ளை தானே? :-)))


 
 
பின்குறிப்பு:
எளிமையில் இனிமை கண்டு,
இளமை மணம் கொண்டு
புதுமையை நினைவோடு நிறுத்தி
தீஞ்சுவைத் தமிழில் கவி படித்து
பல்சுவையில் சுவைபட எழுத்தமுது படைத்து
எங்களது இதயங்களை திணறடித்த
எங்கள் "இதயக்கனி" சீதாம்மா..
இன்னும் பலகாலம் எங்களோடு கூட உங்கள்
அனுபவ பாடங்களை பகிர்ந்து எங்களை
ஆசிர்வதிக்க வேண்டுகின்றோம்..!

அம்மாவின் வெள்ளைமனத்திலிருந்து வெளிப்படும் ஆசி எல்லாருக்கும், குறிப்பாக பெண்களுக்குக் கிடைக்க வேண்டும். இப்படியொரு லட்சியப்பெண்மணியை அம்மா என்று அழைக்க முடிந்ததையும், அவரது குரலைக் கேட்டதையும் ஆண்டுகள் உருண்டோடினாலும் மறக்க முடியாது.

அருமையான கவிதை!

--

சேட்டைக்காரன்

http://settaikkaran.blogspot.com
*************************************************
உட்கார்ந்து யோசிப்போமில்லே......? :-)))))))))))

--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"

--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"


--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"



--
சேட்டைக்காரன்

http://settaikkaran.blogspot.com
*************************************************
உட்கார்ந்து யோசிப்போமில்லே......? :-)))))))))))

--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"

No comments:

Post a Comment