--
மதுரை: அரசு
மருத்துவர்கள் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றுவதற்கு தடை விதிப்பது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருகிறது.
கன்னியாக்குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் உயிர்காக்கும் கலைஞர் காப்பீட்டு திட்டப் பணிகளை ஆய்வு செய்ய வந்த சுகாதாரத் துறை அமைச்சர் எம்ஆர்கே பண்ணீர்செல்வம் நாகர்கோயிலில் நிருபர்களிடம் கூறுகையில்,
'அரசு மருத்துவர்கள் அரசாங்க மருத்துவமனைகள் தவிர தனியார் கிளினிக்குகளில் வேலை செய்வதற்கு தடை விதிப்பது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.
பொது சுதாகாரத் துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களிடம் இதுபற்றி கருத்து கேட்ட பின் இதுபற்றி அரசு இறுதி முடிவெடுக்கும்.
தனியார் கிளினிக்குகளில் வேலை பார்ப்பதற்காக அரசுப் மருத்துவமனையில் பணிகளை தவிர்க்கும் மருத்துவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
இவ்விஷயத்தில் அரசு விரைவில் முடிவெடுக்கும். தமிழகம் முழுவதும் நீண்ட நாட்களுக்கு பிறகு 28 ஆயிரம் துணை மருத்துவப் பணியாளர்கள் மற்றும் 6 ஆயிரத்து 118 மருத்துவர்களை அரசு நியமித்துள்ளது.
விழுப்புரம் மற்றும் திருவாரூர் மருத்துவக் கல்லூரிகள் அடுத்த இரண்டு மாதங்களில் திறக்கப்படும்' என்றார்.
--
நட்புடன்,
பாலாஜி பாஸ்கரன்
(அன்பே சிவம்)
----------------
மரம் வளர்ப்போம்!
அலுவலகத்தில் தேவையில்லாதவற்றை பிரதி எடுத்து காகிதங்களை வீணாக்க வேண்டாம்!!
தண்ணீரை வீணாக்காமல், முடிந்தளவு தேவையான அளவு மட்டும் பயன்படுத்துவோம்!!!
http://balaphotoblog.blogspot.com/
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"
--
அன்பே கடவுள்
சதீஷ்
--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"
No comments:
Post a Comment