2010/2/19 jayashree shankar <jayashree43@gmail.com>
சுட்டிப் பெண்ணல்ல சீதா.....!!நிலவுக்குக் கை கால் முளைத்த சிட்டு சீதா...பாரதி கண்ட கனவை நனவாக்ககாரிகையாய் வளர்ந்து வந்த கனிகையவள்...தொட்ட இடமெல்லாம் தொல்லையும்,கால் பட்ட இடமெல்லாம் காமெடியுமாய்...வளையவர.....பட்டாம்பூச்சியாய் சிங்காரித்து பள்ளிக்குஅனுப்பினால்......பாதியிலே..பரட்டையாய் சுவரேறி குதித்து - பெற்றவரின்வயிற்றில் புளி கரைத்த தவப்புதல்வி..வாயாடி, வம்புக்கிழுக்கும்.. குட்டிப் பிசாசு..வைத்த பெயரை மறக்கடித்துபட்டப் பெயரிலேயே காலத்தைப் போக்கியரெட்டைவால் ரெங்கநாயகி...கதிருக் காட்டுக்குள்ளே குதிரு போல் நுழைந்துகொள்ளையடித்த கருதைஎல்லாம்.திருட்டுத்தனமாய்பாவாடை பக்கெட்டில் அமுக்கி - கருதும் களவுமாய் பிடிபட,சிதறிய சொத்தைக் கதிர் மொத்தமாய் காலைவாரஅடிக்க வந்த காவலனும் , அதிர சிரிக்க வைக்க ..பேந்த பேந்த விழித்த ரெட்டைசுழி ரெங்கம்மா..புளியம்பழ ஆசையால் மரமேறி விழுந்தவளைகொம்பு தாங்கி பிடிக்க, வௌவாலாய் மரத்தில் தொங்கிவாங்கிக் கட்டிக்கொண்ட கதை சீதையின் சரித்திரத்தில்சீம்பாலாய் சுவைக்கிறதே..பாடம் சொல்லும் வைத்தியாரும்தப்பவில்லை இவள் தொல்லையால்...ஊரெல்லாம் வம்பு சீதாவுக்கு கம்பு..தேறாது, உருப்படாது, இதெல்லாம் எங்கே போய்குப்பை கொட்டப் போறதோ......இதுபோன்றஅர்ச்சனையே...ஆசிர்வாதமாய்நித்தம் வாங்கிய சுடர்மணி திலகம்.....சீதாவும்..அனைத்தையும் பொய்யாகி...பட்டமும் கேடயமும், பதக்கமும்,பரிசும்,சான்றிதழும்..நல்பதவியும்..பதவிசுமாய் புகழோடு வளைய வர..சுட்டிப் பெண்ணாய் பார்த்தவர்கள்வியந்து வாய் பிளக்க..சீதாபோல் வருமா.... என தட்டை திருப்பிப் போட்டுதம்பட்டமும் அடித்தனர்..சீதா மட்டும் தன் மனசுள்...ஆடியசுட்டிக் குழந்தையை இறுகக் கட்டிப் போட்டுபயமுறுத்தி தூங்க வைத்திருந்தாள்..வருடக் கணக்கில்...என்றாவது ஒருநாள், சுட்டி சீதா விழித்துக் கொண்டால்,கொண்டாட்டமாய் ஜீன்ஸ் போட்ட வேதாளம்முருங்கை மரத்தில்... தொங்குமோ..?!!சேட்டைக்கார மன்னனிடம்...கேள்வி கேட்டு கெடு வைக்க?ஜெயஸ்ரீ ஷங்கர்.பின்குறிப்பு:எளிமையில் இனிமை கண்டு,இளமை மணம் கொண்டுபுதுமையை நினைவோடு நிறுத்திதீஞ்சுவைத் தமிழில் கவி படித்துபல்சுவையில் சுவைபட எழுத்தமுது படைத்துஎங்களது இதயங்களை திணறடித்தஎங்கள் "இதயக்கனி" சீதாம்மா..இன்னும் பலகாலம் எங்களோடு கூட உங்கள்அனுபவ பாடங்களை பகிர்ந்து எங்களைஆசிர்வதிக்க வேண்டுகின்றோம்..!என்றும் அன்போடுகுழுவினர்கள்.--
You received this message because you are subscribed to the Google Groups "Mazalais" group.
To post to this group, send an email to mazalais@googlegroups.com.
To unsubscribe from this group, send email to mazalais+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/mazalais?hl=en-GB.
--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"
No comments:
Post a Comment